சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக ஆவண மேலாண்மை குறித்த விரிவுரை நிகழ்வை நடத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 16 OCT 2026 4:18PM by PIB Chennai

மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை தில்லியில் உள்ள அமைச்சகத்தின் சம்வாத் மாநாட்டு மையத்தில், ஆவண மேலாண்மை குறித்த ஒரு விரிவுரை நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி, தூய்மையை நிறுவனமயமாக்குதல், நிலுவைப் பணிகளைக் குறைப்பதற்கான சிறப்பு இயக்கம் 6-ன் ஒரு பகுதியாக அமைந்தது. செயலகப் பயிற்சி, மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் விரிவுரையாளர் திரு பி.கே. ஜெயஸ்வால் விரிவுரை ஆற்றினார்.

முறையான ஆவண மேலாண்மை, அதிகாரப்பூர்வ ஆவணங்களை முறையாகப் பராமரித்துப் பாதுகாத்தல், கோப்புகளை உரிய நேரத்தில் ஆய்வு செய்தல், போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.

அமர்வின் போது, ​​பங்கேற்பாளர்களுக்குப் பொது ஆவணச் சட்டத்தின் தொடர்புடைய விதிகள், ஆவணப் பாதுகாப்பு அட்டவணை, ஆவணங்களின் வகைப்பாடு, அவற்றைப் பாதுகாத்தல், தேவையற்ற ஆவணங்களை அகற்றுதல் ஆகியவை தொடர்பான துறைசார் நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324360&reg=3&lang=1

 

(Release ID : 2324360)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324495) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी