நிதி அமைச்சகம்
ஓபியம் பயிரிடும் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 6:27PM by PIB Chennai
மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தரப்பிரதேச அலுவலகம் சார்பில் பாரபங்கியில் உள்ள மாவட்ட போதைப்பொருள் தடுப்பு அலுவலர் அலுவலக வளாகத்தில், ஓபியம் பயிரிடும் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறியும் நிகழ்வானது அக்டோபர் 12-ம் தேதி நடைபெற்றது.
ஓபியம் பயிரிடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு விரைவான, எளிதான தீர்வுகளை வழங்குவதையும், அதன் சாகுபடியை விவசாயிகளுக்கு மேலும் சாதகமானதாக மாற்றுவது குறித்த ஆலோசனைகளைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
லக்னோ துணை போதைப்பொருள் தடுப்பு ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்த பொது விசாரணையில், லக்னோ உதவி போதைப்பொருள் தடுப்பு ஆணையர் மற்றும் பாரபங்கி பிரிவைச் சேர்ந்த பிற அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின்போது, விவசாயிகள் ஓபியம் சாகுபடி தொடர்பான தங்கள் அச்சங்களை வெளிப்படுத்தினர். அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சட்டப்பூர்வ ஏற்பாடுகள் மற்றும் நிர்வாக ரீதியிலான தீர்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324039®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324401)
வருகையாளர் எண்ணிக்கை : 8