சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
என்எஃப்எஸ்சி உதவித்தொகையால் முனைவர் படிப்பைத் தொடரும் இளைஞர்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 1:54PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் காங்ராவைச் சேர்ந்த ஆய்வாளரான அஜய் குமாரின் பயணம், நிதிச் சவால்கள் நிறைந்ததாக இருந்தது.
33 வயதான அஜய் குமார், பட்டியல் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகைத் திட்டமான என்எஃப்எஸ்சி திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு முன்பு, கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டார்.
அவரது ஆய்வு உதவித்தொகை 2024 ஜனவரியில் தொடங்கியது. இதில் ஆய்வு உதவித்தொகை, வீட்டு வாடகைப்படி, எதிர்பாராத செலவுகளுக்கான ஆதரவு ஆகியவை அடங்கும். பெறப்பட்ட உதவியின் மொத்தத் தொகை ரூ.40,700 ஆகும்.
இந்த ஆதரவு, நிதி நெருக்கடிகள், கல்விச் செலவுகள், ஆராய்ச்சிக்குத் தேவையான வளங்களைப் பெற அவருக்கு உதவியுள்ளது. இந்த உதவியால், அஜய் தனது ஆராய்ச்சி, கல்விப் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடிந்ததுடன், முனைவர் படிப்பைத் தொடர்வது தொடர்பான நிதி நெருக்கடிகளையும் தணித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2324281®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324320)
வருகையாளர் எண்ணிக்கை : 12