சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தொலைத்தொடர்புத் துறை சார்பில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2026 1:55PM by PIB Chennai
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை, தமிழ்நாடு வட்டார முதன்மை தொலைத்தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் (Pr.CCA), சென்னை, ஈரோடு, சேலம், திருச்சி, கோவை, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஓய்வூதியதாரர்களுக்காக நாடு தழுவிய டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் முகாம் 5.0-ஐ நடத்துகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது தற்போதைய நிலையைச் சரிபார்த்துக்கொள்ளவும், தங்களின் மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்படுவதையோ அல்லது அதில் எவ்வித தடையோ ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த பிரத்யேக முகாம்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
|
வ.எண்:
|
முகாம் நடைபெறும் இடம்
|
முன்மொழியப்பட்ட முகாம் தேதிகள்
|
-
|
முதன்மை தொலைத்தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், எண்.60, எத்திராஜ் சாலை, சென்னை 600 008
|
நவம்பர் 1, 2026 முதல் நவம்பர் 30, 2026 வரை
|
-
|
பொது மேலாளர் அலுவலகம், பிஎஸ்என்எல், கோயம்புத்தூர்
|
நவம்பர் 2, 2026
|
-
|
பொது மேலாளர் அலுவலகம், பிஎஸ்என்எல், ஈரோடு
|
நவம்பர் 13, 2026
|
-
|
பொது மேலாளர் அலுவலகம், பிஎஸ்என்எல், திருச்சி
|
நவம்பர் 13, 2026
|
-
|
பொது மேலாளர் அலுவலகம், பிஎஸ்என்எல், சேலம்
|
நவம்பர் 20, 2026
|
-
|
பொது மேலாளர் அலுவலகம், பிஎஸ்என்எல், மதுரை
|
நவம்பர் 23, 2026
|
இந்த முகாம்களில் பங்கேற்கும் ஓய்வூதியதாரர்கள், ஆதார் நகல், ஓய்வூதியதாரரின் பெயர், புகைப்படம் மற்றும் முழுமையான விபரங்கள் அடங்கிய ஓய்வூதிய கணக்கு (PPO) புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட உயிர்வாழ் சான்றிதழ் படிவம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த முகாம் தொடர்பான சந்தேகங்களுக்கு தமிழ்நாடு வட்டார முதன்மை தொலைத்தொடர்பு கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தை 044-28264568 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது aopda.tn-dot[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
***
TV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2324286)
வருகையாளர் எண்ணிக்கை : 19