சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருவாரூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
14 OCT 2026 5:36PM by PIB Chennai
_20261014183933_ba3ae7.png)
திருவாரூரில் புதிய ஆதார் சேவை மையத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2026 அக்டோபர் 14 அன்று (இன்று) தொடங்கியது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் துணை இயக்குநர், இதர அலுவலர்கள் முன்னிலையில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி டி.சத்யா தொடங்கி வைத்தார்.
அப்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் திட்டங்களைக் குறித்து பாராட்டினார். அங்கு வருகை தந்தவர்களுடன் அவர் உரையாடினார். அத்துடன் அந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் பதிவுகள், புதுப்பித்தல் நடைமுறைகளைக் குறித்து கேட்டறிந்து பல்வேறு ஆதார் சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த மையம் பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் செயல்படும். இந்த ஆதார் சேவை மையத்தில் புதிய பதிவுகள், விவரங்களை பதிவு செய்தல், பயோமெட்ரிக் புதுப்பித்தல், குறைதீர்ப்பு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் புதிய மையம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 22 ஆதார் சேவை மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இயக்கி வருகிறது. விரைவில் 8 மையங்களை அது திறக்க உள்ளது.
ஆதார் தொடர்பான சேவைகளை பெற விரும்புவோர் தங்களுடைய வருகையை https://bookappointment.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.
***
TV/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2323481)
வருகையாளர் எண்ணிக்கை : 9