தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய தொலைத்தொடர்பு சேவை செயல்திறன் குறியீட்டு அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2026 6:00PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2026 ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான "இந்திய தொலைத்தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறியீட்டு அறிக்கையை" வெளியிட்டுள்ளது.
சேவை வழங்குநர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, 2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்தில் தொலைத்தொடர்பு, கேபிள் டிவி, டிடிஎச் மற்றும் ரேடியோ ஒளிபரப்புச் சேவைகளின் வளர்ச்சிப் போக்குகளை விரிவாக எடுத்துரைக்கிறது.
நாட்டின் மொத்த இணையதளச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2026 மார்ச் இறுதியில் 109.27 கோடியாக இருந்த நிலையில், ஜூன் இறுதியில் 1.96 சதவீத வளர்ச்சியடைந்து 111.41 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் கம்பிவழி இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 4.77 கோடியாகவும் கம்பியில்லா இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 106.64 கோடியாகவும் உள்ளது.
இவ்வறிக்கையின் முழுமையான விவரங்களை டிராய் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.trai.gov.in) அறிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322388®=3&lang=1
***
TV/VK/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2323265)
வருகையாளர் எண்ணிக்கை : 9