சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் குறைதீர்ப்பு முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 4:31PM by PIB Chennai

அஞ்சல் துறை சார்பில், குறைதீர்ப்பு முகாம் 2026 அக்டோபர் 16-ம் தேதியன்று காலை 11 மணிக்கு பொது அஞ்சலக தலைமை அலுவலகம், சென்னை 600001 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.  இந்தக் குறைதீர்ப்பு முகாமில், அஞ்சலக சேவை தொடர்பான குறைபாடுகளை வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை அஞ்சல் மூலமாக, ஸ்வாதி மாதிரிமா, தலைமை அஞ்சலக அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகம், சென்னை- 600001 என்ற முகவரிக்கு அக்டோபர் 14-ம் தேதிக்கு முன்பு அனுப்பலாம். அந்தப் புகார்கள் சென்னை பொது அஞ்சலகத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

***

TV/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2322425) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English