சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கான விழிப்புணர்வு மாநாட்டை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 09 OCT 2026 9:33PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்-ன் சென்னை கிளை அலுவலகம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு அலுவலகத்துடன் இணைந்து, இன்று (அக்டோபர் 9, 2026) சென்னையில் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கான மாநாட்டை நடத்தியது.

உலகத் தரநிலைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பிஐஎஸ் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினரிடையே இந்திய தரநிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவற்றைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் விஞ்ஞானியும் மூத்த இயக்குநரும் தலைவருமான திரு எஸ்.டி. தயானந்த், வரவேற்புரையாற்றினார். உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், புத்தாக்கம் ஆகியவற்றில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். தரத் தேவைகள், இந்திய தரநிலைகளைப் பின்பற்றுவது ஆகயவை நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துவதோடு, நுகர்வோரின் நம்பிக்கையை வளர்த்து, சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க உதவுகிறது என்றும் அவர் தெரிவித்தார். பிஐஎஸ் சான்றிதழ் நடைமுறைகள், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள், சோதனை வசதிகள் போன்றவை குறித்து அறிந்துகொள்ளுமாறும் பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

சென்னை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சோதனை மையத்தின் இணை இயக்குநரும் தலைவருமான திரு வெள்ளதுரை, தொடக்கவுரையாற்றினார்.

இந்திய தரநிலைகளைப் பின்பற்ற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் தயாரிப்புகளின் தரம், நுகர்வோரின் நம்பிக்கை, தொழில் நிறுவனங்களின் போட்டித்திறனை மேம்படுத்துவது ஆகியவற்றில் பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் உறுதிப்பாட்டை இம்மாநாடு எடுத்துரைத்தது.

****

AD/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321605) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English