பிரதமர் அலுவலகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான நிர்வாகம் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2026 2:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா எழுதிய ஒரு கட்டுரையை இன்று (09.10.2026) பகிர்ந்துள்ளார். தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான சேவைக்கும், எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கான தீர்மானத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி கொண்டுள்ள அர்ப்பணிப்பை அவரது 25 ஆண்டுகால பொது வாழ்க்கை பிரதிபலிக்கிறது என்பதை அந்தக் கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.
தில்லியின் ஆளுகைக்கான முக்கிய அம்சங்களை எடுத்துரைத்துள்ள திருமதி ரேகா குப்தா, மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்து, 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய இலக்கிற்குப் பங்களிக்கும் ஒரு வளர்ச்சியடைந்த தில்லியைக் கட்டமைப்பதே அரசின் தொலைநோக்குப் பார்வை என்று வலியுறுத்துவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரதமர் திரு நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கை, இன்றைய தேவைகளுக்கான சேவையையும் நாளைய எதிர்பார்ப்புகளுக்கான தீர்மானத்தையும் ஒன்றிணைக்கிறது, என தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா எழுதியுள்ளார்.
நலத்திட்டங்களை கடைநிலை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முதல் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு போன்ற பணிகளைச் செய்வது வரை, தில்லியின் நிர்வாகத்திற்கான அம்சங்களை அவர் முன்வைத்துள்ளார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு முக்கிய அங்கமாக வளர்ச்சியடைந்த தில்லியைக் கட்டமைப்பதே இதன் இலக்காகும்."
***
(Release ID: 2321270)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2321395)
வருகையாளர் எண்ணிக்கை : 5