சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிஐஎஸ் சார்பாக நீர்வளத்துறை அலுவலர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2026 7:00PM by PIB Chennai

 

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), தமிழ்நாடு அரசின் நீர்வள மற்றும் சிறு நீர்ப்பாசனத் துறைகளின் அலுவலர்களுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை, 2026 அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில், சென்னையில் நடத்தியது. நீர்வளம், பாசனம், நீரியல் கட்டமைப்புகள், நிலத்தடி நீர், தரக் கட்டுப்பாடு, வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுடன் தொடர்புடைய சுமார் 50 அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். 2026 உலகத்  தரநிலைகள் தினத்தை முன்னிட்டு பிஐஎஸ்  மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது

 

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநரும் தலைவருமான  திரு எஸ். டி. தயானந்த் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். நீர்வளம், சிறு நீர்ப்பாசனம் தொடர்பான தரநிலைகள் மற்றும் சிறந்த பொறியியல் நடைமுறைகள் குறித்த தொழில்நுட்பப் புரிதலை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

 

தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையில் வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதரவுப் பிரிவின் தலைமைப் பொறியாளர் திரு பி. சுந்தரராஜன், இணை தலைமைப் பொறியாளர் திருமிகு ஆர்.என். சுரேகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய  திரு பி. சுந்தரராஜன், நீர்வளம் மற்றும் சிறு நீர்ப்பாசனப் பணிகளின் திட்டமிடல், வடிவமைப்பு, செயல்படுத்தலில் தொடர்ச்சியான திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப வல்லமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

****

 

AD/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2321059) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English