சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் குறைதீர்க்கும் முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
07 OCT 2026 12:52PM by PIB Chennai
‘அஞ்சல் சேவை – மக்கள் சேவை’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதன்மூலம், அஞ்சல் சேவைகளின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் சேவைகளை மேம்படுத்துவது குறித்த தங்கள் கருத்துக்களை அனுப்பலாம். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 11,745 தபால் நிலையங்களில் சேவைபெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்கலாம்.
தங்களது குறைகளை ‘அஞ்சல் குறைதீர்க்கும் முகாம்’ என்ற தலைப்புடன் திருமதி சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகம், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002, என்ற முகவரிக்கு 2026 அக்டோபர் 28-ம் தேதிக்கு முன்னதாக அனுப்ப வேண்டும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துக்களை ’அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்' என்ற தலைப்புடன் pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
TV/LN/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2320304)
வருகையாளர் எண்ணிக்கை : 20