சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிஎஸ்ஐஆர் 85 வது நிறுவன தினம் கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 6:20PM by PIB Chennai

சிஎஸ்ஐஆர் - மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவியல் மற்றும் தொழிலக  ஆராய்ச்சி கவுன்சிலின் 85வது நிறுவன தினத்தை சிறப்பாகக் கொண்டாடியது. இந்த நிகழ்வில், கோவாவில் உள்ள தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR-NIO) இயக்குநர் சுனில் குமார் சிங், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆறுமுகம் மந்திரம், மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் கே ரமேஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் ரமேஷா பேசுகையில், சிஎஸ்ஐஆர் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அது பயணித்த பாதைகளை விளக்கியதுடன், சிஎஸ்ஐஆர் உரருவாக காரணமாக இருந்த அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி வாரியத்தை நிறுவுவதில் முக்கியப் பங்காற்றியவர்களை நினைவுகூர்ந்தார். இந்தியாவின் முதல் உள்நாட்டு குழந்தை உணவு, பொதுத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் அழியாத மை, சூப்பர் கணினிகள் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி உள்ளிட்ட சிஎஸ்ஐஆர் சாதனைகளை அவர் பட்டியலிட்டார். அரிமானம் தடுப்பு, மின்முலாம் பூச்சு, மின்உலோகவியல், ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பு, அத்துடன் கழிவுகளிலிருந்து முக்கியமான கனிமங்களைப் பிரித்தெடுத்து மறுபயன்படுத்துதல் ஆகிய துறைகளில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் சாதனைகளை அவர் எடுத்துரைத்தார்.

தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுனில் குமார் சிங்  பொருளாதாரம்: வாய்ப்புகளின் பெருங்கடலும், சவால்களின் கடலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்வின்போது, பேராசிரியர் சிங் CSIR-CECRI-யின் 2025-2026 ஆண்டு அறிக்கையை வெளியிட்டார்.  25 ஆண்டுகள் பணியை நிறைவு செய்த பணியாளர்களும், முந்தைய ஆண்டில் ஓய்வு பெற்ற பணியாளர்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.  மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாக அலுவலர் திரு எம் அருண் மணிகண்ட பாரதி நன்றியுரை வழங்கினார்.

***

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319752) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English