சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 OCT 2026 1:53PM by PIB Chennai
அஞ்சல் துறை சார்பில் அக்டோபர் மாதத்திற்கான மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் வரும் அக்டோபர் 15-ம் தேதி காலை 11:30 மணிக்கு சென்னை நகர அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாமின் தலைவர், அஞ்சல் துறையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை நேரடியாகக் கேட்டறிவார். வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை அக்டோபர் 9-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் மற்றும் விரைவு அஞ்சல் தொடர்பான புகார்களுக்கு அஞ்சல் அனுப்பிய தேதி மற்றும் நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநரின் முழுமையான முகவரி, பதிவு ரசீது எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் விவரங்கள் ஆகியவற்றை முழுமையாகக் குறிப்பிட வேண்டும்.
புகாரானது சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு அல்லது கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடர்புடையதாக இருப்பின் கணக்கு எண் / காப்பீட்டு எண், காப்பீட்டுதாரரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் பெயர் மற்றும் அஞ்சல் துறையுடன் தொடர்பான ஏதேனும் ஆவண விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
கீழ்மட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டங்களில் ஏற்கனவே எடுத்துக்கொள்ளப்பட்டு, புகார்தாரரின் திருப்திக்கு ஏற்ப தீர்வு காணப்படாத குறைகள் மட்டுமே இதில் எடுத்துக்கொள்ளப்படும். புதிய புகார்கள் எதுவும் குறைதீர்ப்பு முகாமில் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
புகார்கள் அனைத்தும் உதவி இயக்குநர், அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், சென்னை நகர மண்டலம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அஞ்சல் உறையின் மீது "Regional Dak Adalat" என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
மேலும் புகார்களை pg.chennaicity@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
***
TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2319745)
வருகையாளர் எண்ணிக்கை : 11