தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-26-ம் ஆண்டிற்கான இந்திய தொலைத்தொடர்பு சேவைகளின் வருடாந்திர செயல்திறன் குறியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 6:36PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்),2025-26-ம் ஆண்டிற்கான இந்திய தொலைத்தொடர்பு சேவைகளின் வருடாந்திர செயல்திறன் குறியீடுகள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை, இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த விரிவான விவரங்களை வழங்குவதுடன், 1 ஏப்ரல் 2025 முதல் 31 மார்ச் 2026 வரையிலான காலத்தில், தொலைத்தொடர்பு சேவைகள், கேபிள் டிவி, டிடிஎச், வானொலி ஒலிபரப்பு சேவைகளின் முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பீடுகள், அதன் வளர்ச்சியையும் எடுத்துரைக்கும் வகையில் உள்ளது. முக்கிய சேவை வழங்கும் நிறுவனங்கள் அளித்துள்ள  தகவல்களின் அடிப்படையில், இந்த மதிப்பீடுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முழுமையான விபரங்கள், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளமான www.trai.gov.in மற்றும் http://www.trai.gov.in/release-publication/reports/performance-indicators-reports என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பான ஏதேனும் பரிந்துரைகள் அல்லது விளக்கங்களுக்கு, ட்ராயின் ஆலோசகர் (எப்&இஏ) திரு விஜய் குமாரின் +91-20907773 என்ற தொலைபேசி எண் அல்லது advfea1@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

மொத்த இணையச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் 2025 இறுதியில் 969.10 மில்லியனாக இருந்த நிலையில், மார்ச் 2026 இறுதியில் 1092.79 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 12.76% ஆகும். மார்ச் 2026 இறுதியில் இருந்த மொத்தம் 1092.79 மில்லியன் இணையச் சந்தாதாரர்களில், அகண்ட அலைவரிசை சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1065.88 மில்லியனாகவும், நேரோபேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 26.91 மில்லியனாகவும் இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319321&reg=3&lang=1

***

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2319470) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी