சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாப், ஹரியானாவில் வைக்கோல் கழிவுகளை எரிக்கும் சம்பவங்களைத் தடுக்க, பறக்கும் படைகள் நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 7:33PM by PIB Chennai

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நெல் அறுவடைக்குப் பிந்தைய வைக்கோல் எரிப்புச் சம்பவங்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், தேசியத் தலைநகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏகியூஎம்) தனது ஒருங்கிணைந்த கள அளவிலான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையம் விடுத்த அறிவுறுத்தலின் பேரில், 01.10.2026 முதல் 30.11.2026 வரையிலான காலத்திற்கு அந்த மாநிலங்களில் உள்ள 34 மாவட்டங்களில் சிறப்புப் பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

இதற்கேற்ப, பஞ்சாப், ஹரியானாவின் குறிப்பிட்ட மாவட்டங்களில் பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நெல் அறுவடைக்கான மிக முக்கியமான காலகட்டத்தில் இரு மாநிலங்களிலும் விரிவான கள அளவிலான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319355&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319400) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी