சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார ஆட்டோ ரிக்‌ஷா மானிய திட்டத்தின் கீழ் நிதியுதவி

இடுகை இடப்பட்ட நாள்: 05 OCT 2026 5:08PM by PIB Chennai

பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் நீடித்த வாழ்வாதாரத்தை உருவாக்கவும், பொருளாதார நிலையை மேம்படுத்தவும் நிதியுதவி முக்கியப் பங்காற்றுகிறது. சுயதொழில் புரிவதற்கான சரியான தருணத்திலான ஆதரவு, வருவாய் ஆதாரங்களை உருவாக்கவும், குடும்பத்தின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்தவும், தற்சார்பை அதிகரிக்கவும் வாய்ப்புகளை அளிக்கிறது.

அந்த வகையில் மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தின் ஜூனார்தேவ் பகுதியைச் சேர்ந்த திரு துர்கேஷ் பர்கானி மின்சார ஆட்டோ ரிக்‌ஷா மானியத் திட்டம் 2024-ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1,85,000 நிதியுதவி பெற்றார். இது அவருக்கு ஆட்டோ ரிக்‌ஷாவை வாங்கவும், தனக்கும் தம்முடைய குடும்பத்தினருக்கும் வாழ்வாதாரத்தை உருவாக்கவும் உதவியது. இத்திட்டத்தின் கீழ் கிடைத்த நிதியுதவி மூலம், வேலைவாய்ப்பின்றி இருந்த அவர் சுயமாக வருமான ஈட்டத் தொடங்கியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319229&reg=3&lang=1&_gl=1

***

TV/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2319351) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी