சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 2:39PM by PIB Chennai
மத்திய பெறுநிறுவன விவகாரங்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, கிழக்கு தில்லியில் உள்ள, டெல்லி - சஹாரன்பூர் - டேராடூன் (தே.நெ-709B) விரைவுச்சாலையில் இரண்டு நடைபாதை மேம்பாலங்கள் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
இந்த முன்னெடுப்பு, கிழக்கு தில்லிமக்களின் தினசரி போக்குவரத்தையும், பாதசாரிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.
மின்தூக்கி வசதிகள் கொண்ட இந்த மேம்பாலங்கள், பாதுகாப்பான, அர்ப்பணிக்கப்பட்ட, வசதியான பாதசாரிகள் கடக்கும் வழியை வழங்குவதோடு, தடையற்ற வாகனப் போக்குவரத்தையும் உறுதிசெய்யும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் மேம்பாலங்களை பயன்படுத்துவதை எளிதாக்கும்.
அதே பகுதியில் உள்ள வேறொரு இடத்தில் மேலும் ஒரு மேம்பாலத்துக்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மேம்பாலங்களுக்குமான மொத்த செலவு 12.8 கோடி ரூபாயாகும்.
டெல்லி - சஹாரன்பூர் – டேராடூன் விரைவுச்சாலையின் தில்லி பகுதியில் உள்ள மேம்பாலப் பகுதியில், சூரிய தகடுகள் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் பயன்பாட்டால், 2070-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313857®=3&lang=1
***
TV/KS/RJ