சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி சாலைகளில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2026 3:04PM by PIB Chennai

தில்லி தேசிய தலைநகர் பகுதி முழுவதும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக, தூசித் தடுப்பு நடவடிக்கைகளின் செயலாக்கத்தை வலுப்படுத்தவும், சாலைத் தூய்மையை மேம்படுத்தவும் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தில்லி சுற்றுவட்டச் சாலைப் பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் நேற்று (03.10.2026) ஒரு சிறப்பு ஆய்வை மேற்கொண்டது. கண்ணுக்குத் தெரியும் சாலைத் தூசியையும், தூசித் தடுப்புப் பணிகளின் செயல்திறனையும் மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 25 சாலைப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வின் போது, ஆய்வு செய்யப்பட்ட சாலைப் பகுதிகளில், கட்டுமான கழிவுகள் தொடர்பான 17 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. சாலைத் தூசியைக் கட்டுப்படுத்துவதற்கு, திறன்வாய்ந்த சாலைத் தூய்மைப் பணிகள் மிகவும் அவசியமானவை என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. சாலைத் தூசியைக் கட்டுப்படுத்த, தில்லி பொதுப்பணித்துறை, சம்பந்தப்பட்ட பிற முகமைகள் ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் உரிய சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318882&reg=3&lang=1

***

TV/PLM/RJ   


(வெளியீட்டு அடையாள எண்: 2319148) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी