இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 12:26PM by PIB Chennai
தூய்மையையும், அரசுப் பணிகளில் நிலுவையைக் குறைப்பதையும் கவனத்தில் கொண்டு, மத்திய அரசு, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்புப் பிரச்சாரம் 6 நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
செப்டம்பர் 15 முதல் 30 வரையிலான ஆயத்தக் கட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதில், அமைச்சகங்கள் முதலில் இலக்குகளை அடையாளம் காணும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அரசுககள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள் போன்றவை இவற்றில் அடக்கம்.
அக்டோபர் 2 முதல் 31 வரையிலான செயலாக்கக் கட்டத்தில், அரசு அலுவலகங்கள் அவற்றின் இடங்களைத் தீவிரமாக சுத்தம் செய்து, கழிவுகளை அகற்றி, நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு தீர்வு காணும்.
நவம்பர் 16 முதல் 30 வரையிலான மதிப்பீட்டுக் கட்டத்தில், அமைச்சகங்களின் ஒட்டுமொத்த பணிகளும், எட்டப்பட்ட முடிவுகளும் மதிப்பாய்வு செய்யப்படும்.
இம்முறை, அரசு அலுவலகங்களின் மின்-கழிவுகள் அறிவியல் பூர்வமாக அகற்றப்பட்டு மேலாண்மை செய்யப்படுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பான அனைத்துத் தரவுகளும் https://scdpm.nic.in/specialcampaign6/ என்ற பிரத்யேகக் கண்காணிப்பு இணையதளத்தில் நாள்தோறும் புதுப்பிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313760®=3&lang=1
***
TV/KS/SH