ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பணியிடங்களில் சுத்தம், சுகாதாரத்தை பேணிக்காக்கும் தூய்மை பணியாளர்களுக்கு கவுரவம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2026 2:12PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நில வளங்கள் துறை சார்பில், தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி 2026 செப்டம்பர் 30-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்றது. பணியிடங்களில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வரும் தூய்மை பணியாளர்களின் சேவை இதில் கௌரவிக்கப்பட்டது. பணியிடங்களை சுகாதாரமான முறையில் இருப்பதற்கு தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
தூய்மை சேவை இயக்கத்தின் கீழ், நில வளங்கள் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூத்த அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பணியிடங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி சுகாதாரமான சூழலை உருவாக்கி தரும் தூய்மைப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317554®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2317870)
வருகையாளர் எண்ணிக்கை : 7