கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கான சிறப்பு இயக்கம் தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 12:33PM by PIB Chennai

சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில், சிறப்பு இயக்கம் 6.O தொடங்கப்பட்டுள்ளது. 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை இந்த சிறப்பு இயக்கத்தை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக 595 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ள தூய்மை பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறங்களில் தூய்மையைப் பேணுதல் தொடர்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு இயக்கம் 6.O மூலம் தூய்மை, மின்னணு கழிவுகளை அகற்றுதல், தூய்மை பணி தொடர்பான மனுக்களுக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2317480&reg=3&lang=1

***

TV/LN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2317821) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी