சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 4:29PM by PIB Chennai
சரியான நேரத்தில் கிடைக்கும் மறுவாழ்வு ஆதரவு தனிநபர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வர உதவும்.
பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 28 வயதான பிட்டு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளானார்.
பிட்டு, பாங்காவில் உள்ள போதைப்பொருள் மீட்பு மையம் மூலம், போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் உதவியைப் பெற்றார். அந்த மையம், மருத்துவ சிகிச்சை, தனிப்பட்ட ஆலோசனை, உளவியல் அமர்வுகள், குடும்ப ஆலோசனை, ஆதரவு போன்ற சேவைகளை வழங்கியது. இது பிட்டு குணமடைய உதவியது.
தற்போது, பிட்டு குணமடையும் கட்டத்தில் உள்ளார். மேலும், தொடர் சிகிச்சை அமர்வுகளில் அவர் தவறாமல் கலந்துகொள்கிறார். அவரது உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆரோக்கியமான, நிலையான வாழ்க்கை முறையைப் பேணுவதற்காக அவர் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316520®=3&lang=1
----
TV/PLM/GS