கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இயக்கம் 6.0-க்கான ஆயத்தக் கட்டத்தை நிறைவு செய்தது, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 6:47PM by PIB Chennai

தூய்மைப் பணிகளுக்காக மத்திய அரசு நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளும் சிறப்பு இயக்கத்தின் ஆறாவது பதிப்பிற்காக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகமும் அது  சார்ந்த அமைப்புகளும்  விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இயக்கத்திற்கான தயார்நிலையை மதிப்பிடுவது குறித்து அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அனைத்து அமைப்புகளின் தலைவர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிரச்சாரம் முழுவதும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தல், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைத்தல், மின்னணுக் கழிவுகளைத் திறம்பட நிர்வகித்தல் மற்றும் செயல்பாடுகளை முறையாக ஆவணப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் செயலாளர் வலியுறுத்தினார்.

தூய்மை இயக்கத்தின்போது மேற்கொள்வதற்காக 185 தூய்மைப் பிரச்சாரங்களும், ஆய்வு செய்வதற்காக 6,605 இயல் கோப்புகளும் 4,548 மின்னணுக் கோப்புகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2022-ன் படி,சேகரிப்பு, தரம் பிரித்தல், அப்புறப்படுத்துதலுக்காக  5,624 மின்னணுக் கழிவுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316647&reg=3&lang=1

***

TV/BR/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2316889) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी