சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இயற்கை பாதுகாப்பு என்பது ஒரு தேசியப் பொறுப்பு: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பேச்சு
இடுகை இடப்பட்ட நாள்:
29 SEP 2026 7:27PM by PIB Chennai
இந்திய வன அதிகாரிகள் சங்கமும் 'இந்தியன் மாஸ்டர்மைண்ட்ஸ்' தளமும் இணைந்து புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் போராளிகள் விருது 2026 மற்றும் கருத்தரங்கிற்கு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். வனம், வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த வனத்துறை அதிகாரிகள், பாதுகாப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் தொழில் துறைப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், காடுகள், வனவிலங்குகள், விவசாயம், நீர், வாழ்வாதாரங்கள், மனிதக் குடியிருப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு நிலப்பரப்பு அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். பாதுகாப்பு என்பது வெறும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பொறுப்பு என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316681®=3&lang=1
----
TV/BR/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2316884)
வருகையாளர் எண்ணிக்கை : 7