வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 6.0: தூய்மை, நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், திறமையான ஆவண மேலாண்மை ஆகியவற்றில் டிபிஐஐடி கவனம் செலுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
23 SEP 2026 7:17PM by PIB Chennai
2026 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு இயக்கம் 6.0-ன்போது, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), தூய்மை நடைமுறைகளை நிறுவனமயமாக்குதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், ஆவண மேலாண்மையை வலுப்படுத்துதல், பொறுப்பான மின்னணுக் கழிவு அகற்றலை ஊக்குவித்தல், அலுவலக இடங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் மின்னணு மற்றும் மின்சாரக் கழிவுகளைச் சரியாக அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல், சேகரித்தல், அகற்றுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், மின்னணுக் கழிவு மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதுதவிர, நிலைத்தன்மை மற்றும் சூழற்சிப் பொருளாதாரக் கோட்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான புதுமையான தீர்வுகளைக் கையாள டிபிஐஐடி-ன் கீழ் செயல்படும் அமைப்புகள் ஊக்குவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2314122®=3&lang=1
***
TV/BR/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2316617)
வருகையாளர் எண்ணிக்கை : 12