புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொழில் உற்பத்தி குறியீடு 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2026 4:00PM by PIB Chennai

இந்தியாவின் தொழில் உற்பத்தி குறியீடு 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  இது கடந்த ஜூலை மாதத்தில் 6.7 சதவீதமாக இருந்தது.

தொழில் உற்பத்தி குறியீடுகள் சார்ந்த விரைவு மதிப்பீட்டு அறிக்கைகள் மாதந்தோறும்  வெளியிடப்பட்டு வருகிறது. உற்பத்தி தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப்பெற்று அதனை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய மதிப்பீடுகள் தொகுக்கப்படுகிறது. இத்தகைய மதிப்பீடுகள் அடுத்தடுத்து வெளியிடப்படும் மதிப்பீடுகளின் திருத்தத்திற்கு உட்படுத்தப்படும்.

தற்போது ஆகஸ்ட் மாத்திற்கான தொழில் உற்பத்தி குறியீடு மற்றும் பயன்பாடு அடிப்படையிலான குறியீடுகளின் விரைவு மதிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தொழில் உற்பத்தி குறியீடு வருடாந்திர வளர்ச்சி அடிப்படையில் 8 சவீதத்தை  பதிவு செய்துள்ளது. இது உற்பத்தி துறையில் 9 சதவீத வளர்ச்சி விகிதம், மின்சாரம், எரிவாயு விநியோகத்துறையின் 12.3 சதவீத வளர்ச்சியுடன் இந்த மதிப்பீடு அதிகரித்துள்ளது.

உற்பத்தி துறை மூன்று மாதங்களாகத் தொடர்ந்து 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. மோட்டார் வாகனங்கள், மின் சாதனங்கள், போக்குவரத்து உபகரணங்களின் உற்பத்தி ஆகியவற்றின் வளர்ச்சி விகிதங்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக தொழில் உற்பத்தியின் குறியீடு உயர்ந்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2315957&reg=3&lang=1

***

TV/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316198) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी