அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அதி நவீன துல்லிய மருத்துவத்தில் நானோ மருத்துவ தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 3:00PM by PIB Chennai
நானோ மருத்துவம், அதி நவீன துல்லிய மருத்துவத்திலும், தனி நபர்களுக்கு ஏற்ற குறிப்பிட்ட சுகாதாரப் பராமரிப்பிலும் முக்கியப் பங்காற்றும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு ஆராய்ச்சி உலகளாவிய ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நானோ மருத்துவம் தொடர்பான உலக மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், துல்லியமான ஆற்றலைக் கொண்டுள்ள நானோ மருத்துவத்தை, மருத்துவத் துறையில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முன்னேற்றங்களில் ஒன்று என விவரித்தார். ஒரு நோயாளியின் மரபணு அமைப்பு, வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவற்றின் அடிப்படையில் அவருக்கு ஏற்ற தனித்துவமான சிகிச்சையை வழங்குவது முக்கியம் என்று அவர் தெரிவித்தார். நானோ தொழில்நுட்பம் செல்கள் நிலையில் துல்லியத்திற்கான புதிய சாத்தியக்கூறுகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
நானோ மருத்துவத்தில் உருவாகி வரும் முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக, புகழ்பெற்ற விஞ்ஞானிகள், இளம் ஆராய்ச்சியாளர்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த மூன்று நாள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ரோஜர் டி கோர்ன்பெர்க் இந்த மாநாட்டின் தலைவராக உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315531®=48&lang=1
****
(Release ID: 2315531)
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315611)
வருகையாளர் எண்ணிக்கை : 14