இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 6:51PM by PIB Chennai

ஜிப்மர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காசநோய்க்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அதி நவீன மரபணு சார்ந்த பகுப்பாய்வு மூலம் அனைத்து மருந்துகளுக்கும் உணர்திறன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான மூன்று நாள் தேசிய மாநாடு மற்றும் கலந்துரையாடல், இன்று நிறைவடைந்தது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாசநாதன், ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி, மூத்த பொது சுகாதார அதிகாரிகள் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

நிறைவுரையாற்றிய திரு கைலாசநாதன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனங்களைப் பாராட்டியதுடன், காசநோயற்ற இந்தியா என்ற தேசிய இலக்கை மீண்டும் வலியுறுத்தினார். இலக்கு அடிப்படையிலான அணுகுமுறையிலிருந்து, காசநோயை முழுமையாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இளைஞர்கள், திருமணமான இளம் பெண்கள் மற்றும் மாணவர்களிடையே காசநோயின் மாறிவரும் போக்குகள் குறித்து ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். புதுச்சேரியில், 2025-ம் ஆண்டில் சிகிச்சையின் வெற்றி விகிதம் 88% ஆகவும், காசநோய் இல்லாத நிலையை 36 கிராமங்கள் அடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

****
SS/BR/SH