சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 71-வது நிறுவன நாள் கொண்டாட்டம்: மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2026 3:13PM by PIB Chennai
மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், இன்று (25.09.2026) புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ்-ன் 71-வது நிறுவன நாள் விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி அனுப்ரியா படேல், 1956-ல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து, புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் சுகாதாரப் பயணத்தில் ஒரு சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது என்று கூறினார். மருத்துவக் கல்வியை மறுவரையறை செய்வதிலும், புரட்சிகரமான ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருப்பதிலும், உயர்தர சிகிச்சைகளை வழங்குவதிலும் அதன் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். இந்நாட்டின் மருத்துவக் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் அவர் எடுத்துரைத்தார். நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்த நிலையில், தற்போது 23 எய்ம்ஸ் நிறுவனங்களாக அது விரிவடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2014-ல், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 ஆக இருந்த நிலையில் தற்போது அது 800-க்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். தரமான மருத்துவக் கல்வி ஒவ்வொரு பகுதிக்கும் சென்றடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று திருமதி அனுப்ரியா படேல் கூறினார்.
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2314837®=3&lang=1
***
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2315089)
வருகையாளர் எண்ணிக்கை : 15