சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மரில் காசநோய்க்கான மேம்பட்ட மரபணு அடிப்படையிலான பரிசோதனைகள் குறித்த தேசிய மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2026 4:01PM by PIB Chennai

காசநோய்க்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிநவீன மரபணு முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து உணர்திறன் பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான தேசிய மாநாடு மற்றும் கொள்கை கலந்துரையாடலை புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி ஜிப்மர் நிறுவனதில் இன்று தொடங்கிவைத்தார்.

 

செப்டம்பர் 23 முதல் 25 வரை மூன்று நாட்கள் நடைபெறும் தேசிய மாநாட்டில் கொள்கை வகுப்பாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மரபணு அறிவியலாளர்கள், பல்வேறு துறை சார்ந்த பங்குதாரர்கள் பங்கேற்று, காசநோயில் மருந்து எதிர்ப்பு திறனைக் கண்டறிதலை வலுப்படுத்துதல், காசநோய் கண்டறிதல், சிகிச்சையில் மேம்பட்ட மரபணு தொழில்நுட்பங்களை முன்னெடுத்தல் குறித்து கலந்துரையாடுகின்றனர்.

 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, காசநோய் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் சவால்களை எடுத்துரைத்தார். இந்நோய்க்கான மருந்து எதிர்ப்பைத் துல்லியமாகவும் உரிய காலத்திலும் கண்டறிவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

மருந்து எதிர்ப்பை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உரிய சிகிச்சை முடிவுகளை மேற்கொள்ளவும் முடியும் என அவர் குறிப்பிட்டார்.

 

காசநோய் ஒழிப்பிற்கு மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகங்கள், பொது சுகாதாரத் திட்டங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்பப் பங்குதாரர்கள், சமூகங்களுக்கிடையேயான தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என்று டாக்டர் நேகி  வலியுறுத்தினார்.

 

***

 

SS/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2314551) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English