சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
என்எஸ்எஃப்டிசி - டபிள்யூபிஎஸ்சிடிசி ஆதரவுடன் பசுமையிலிருந்து செழிப்பை நோக்கிய பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 5:06PM by PIB Chennai
சரியான நேரத்தில் கிடைக்கும் நிறுவன ஆதரவு, நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கவும், தங்கள் குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் பெண்களுக்கு உதவும். அதே சமயம், குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், கிராமப்புறப் பெண்கள், தொழில் தொடங்குவதையும் அவர்களது பொருளாதார சுதந்திரத்தையும் தடுக்கின்றன.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள 11 உறுப்பினர்களைக் கொண்ட சுய உதவிக் குழுவான 'மா லட்சுமி மஹிளா சமிதி', தேசிய பட்டியல் வகுப்பினருக்கான கடன் மேம்பாட்டு கழகமான என்எஸ்எஃப்டிசி-யின் மஹிளா சம்ரித்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ₹1 லட்சம் கடனுதவியுடன் பசுமைக்குடில் விவசாயம் மூலம் தனது வாழ்வாதாரத்தை மாற்றியமைத்தது. இந்தக் கடன் 5 பிப்ரவரி 2025 அன்று மேற்குவங்க மாநிலத்தின் பட்டியல் வகுப்பினர் மேம்பாட்டு கழகமான டபிள்யூபிஎஸ்சிடிசி மூலம் வழங்கப்பட்டது.
இப்போது, மா லட்சுமி மகளிர் சமிதியின் உறுப்பினர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நிதிச் சுதந்திரத்துடனும் முன்னேறி வருகின்றனர். சரியான நேரத்தில் வழங்கப்படும் கடனும், ஆதரவும், கிராமப்புறப் பெண்கள் நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்க எவ்வாறு உதவும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313530®=3&lang=1
(Release ID : 2313530)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313638)
வருகையாளர் எண்ணிக்கை : 7