சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதையிலிருந்து மீ்ண்ட காஷ்மீர் கிரிகெட் வீரர்!
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 3:03PM by PIB Chennai
போதைப் பழக்கம் இன்றைய தலைமுறையினரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சை, ஆலோசனை, மறுவாழ்வு அளித்தால் போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு ஜம்மு காஷ்மீரின் புட்கம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது சஜ்ஜாத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சாட்சி. பட்டதாரியான இவர், மாநில அளவிலான கிரிகெட் போட்டிகளில் பங்கெடுத்தவர். தேசிய போதைப் பொருள் தடுப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் மாவட்ட போதை ஒழிப்பு மையமான சாரா சாஜின் உதவியுடன் போதையின் பிடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். மீண்டும் விளையாட்டில் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கும் அந்த இளைஞர், போதையின் பிடியின் சிக்காமல் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். போதைக்கு அடிமையானதால் சஜ்ஜாத்தின் கிரிக்கெட் லட்சியம் தகர்ந்தது, குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. சமுகம் இழித்துப் பேசியதால் மன அழுத்தத்துக்கு ஆளானார். போதைப் பழக்கத்தால் அவர் சந்தித்த அவமானங்களே, அதிலிருந்து அவர் மீண்ட வர உதவியது. தொடர் சிகிச்சை, உடல் ஆரோக்கியம், சத்துணவு என தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார் சஜ்ஜாத். கடுமையாகப் போராடி போதை எனும் அரக்கனை ‘க்ளீன் போல்டு’ செய்தார் அந்த இளம் கிரிக்கெட் வீரர். இன்றைக்கு போதையில்லா வாழ்க்கையை தேர்ந்தெடுக்க மற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மாறியிருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக்காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313416®=3&lang=1
***
TV/MM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313628)
வருகையாளர் எண்ணிக்கை : 8