நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தூய்மையே சேவை 2026 இயக்கத்தின் பணியை மத்திய உணவு,பொது விநியோகத்துறை தொடங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2026 2:35PM by PIB Chennai
மத்திய அரசின் உணவு, பொது விநியோகத்துறை அதன் பொதுத்துறை நிறுவனங்கள், சார்பு அலுவலகங்களுடன் இணைந்து நாடு முழுவதும் தூய்மையே சேவை 2026 இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படி இந்த இயக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
புதுதில்லியில் 2026 செப்டம்பர் 17 அன்று உணவு, பொது விநியோகத்துறை செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா, துறை அதிகாரிகளுக்குத் தூய்மை உறுதிமொழியை செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து அந்த வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
2026 செப்டம்பர் 18 அன்று தூய்மை குறித்த வாசகம் எழுதும் போட்டியில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தூய்மையே சேவை 2026 இயக்கத்தின் 6 முக்கியத்தூண்களில் ஒன்றான தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பயிலரங்கையும் இந்தத் துறை ஏற்பாடு செய்தது. அப்போது இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்பாகவும் மத்திய அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அதன் பயன்கள் குறித்துத் தூய்மைப் பணியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313410®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2313625)
வருகையாளர் எண்ணிக்கை : 6