சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பெக்டெல் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு, நிதியுதவியுடன் சென்னை ஐஐடியில் ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 4:25PM by PIB Chennai

பெக்டெல் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு, நிதியுதவியுடன் சென்னை ஐஐடி வளாகத்தில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. கட்டுமானம், உள்கட்டமைப்பு துறைகளுக்கான ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் ஆகியவற்றில் புதுமைக்கண்டுபிடிப்பு, தொழில்துறை பயன்பாடுகளை மேம்படுத்தும் வகையில் ரூ.3.30 கோடி மதிப்பில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உத்திசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் தொடர்புத்துறை தலைவர் பேராசிரியர் அஸ்வின் மகாலிங்கம், துறைத் தலைவர்களான பேராசிரியர் டி அசோகன், பேராசிரியர் கோஷி வர்கீஸ், பெக்டெல் இந்தியா நிறுவனப் பிரதிநிதிகளான இயக்குநர் திரு ராஜா எலுரி, ரோபோட்டிக்ஸ் மேலாளர் திரு ரவி டாடா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த முன்முயற்சியானது நீண்ட கால செயல்திட்டத்தின் மூலம் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முன்மாதிரி உருவாக்கம் ஆகியவற்றை முன்னெடுத்து கல்விசார் ஆராய்ச்சியை கள அளவிலான பொறியியல் தேவைகளுடன் இணைக்கிறது. இந்த கூட்டாண்மையின் கீழ், பெக்டெல் இந்தியா, பாடத்திட்டத்தின் மேம்பாட்டிற்கு தமது தொழில் நிபுணத்துவத்தை அளித்து ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டும், மாணவர்களுக்கு பயிற்சிக்கான வாய்ப்புகளை அளிக்கும் இந்த ஆய்வகம் ஆழ் தொழில்நுட்ப ஆட்டோமேஷன் தீர்வுகளை உருவாக்குதல், திறன்மிக்க பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், நாட்டின் உள்கட்டமைப்பில்  மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை விரைவுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313624) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English