பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அறநெறி வழியில் மகிழ்ச்சி, வளம், நல்வாழ்வு ஆகியவற்றுக்கான பயணத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 9:38AM by PIB Chennai

அறநெறி, உரிய வழிகாட்டுதல் மூலம் மகிழ்ச்சி, வளம், ல்வாழ்வு ஆகியவற்றுக்கான பயணத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

பாதுகாப்பான புகலிடத்தை அளித்து அறநெறியை நிலை நிறுத்தக்கூடிய, எப்போதும் காக்கக்கூடிய பூமியையும், பரந்த எல்லையற்ற வானத்தையும், மனிதர்கள் அடைக்கலமாகக் கொள்ளட்டும். பாவச் செயல்களிலிருந்து விடுபட்டு நல்வழியில் சென்று வலிமையான, முறையாக அமைக்கப்பட்ட வளம் துடுப்புகளைக் கொண்ட தெய்வீக படகில் ஏறி மகிழ்ச்சி, செழுமை, நல்வாழ்வு ஆகியவற்றை நோக்கி நாம் பாதுகாப்பாக கடந்து செல்வோமாக.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313280&reg=48&lang=1

***

SS/IR/PS/SM 


(வெளியீட்டு அடையாள எண்: 2313339) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Gujarati , Malayalam