சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்டியலின மாணவர்களுக்கான தேசியக் கல்வி உதவித்தொகை மூலம் ஆராய்ச்சி மாணவர்கள் பயனடைகின்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2026 3:56PM by PIB Chennai

உரிய தருணத்தில் கிடைக்கும் கல்வி உதவித்தொகை விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களுடைய படிப்பை தொடரவும், ஆராய்ச்சியை நிறைவு செய்யவும் உதவுகிறது.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 33 வயதான டாக்டர் அனிக் சாஹா என்பவர்  பட்டியலின மாணவர்களுக்கான தேசியக் கல்வி உதவித்தொகை மூலம் முனைவர் பட்டத்தை நிறைவு செய்து ஆராய்ச்சித் துறையில் தனது பணியைத் தொடங்கினார்.

அவருடைய தந்தை மறைவுக்குப் பிறகு, டாக்டர் சாஹாவின் குடும்பம் கடினமான நிதிச் சிக்கலை எதிர்கொண்டது.

இந்நிலையில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை அவரது எம்ஃபில், பிஎச்டி படிப்புகளைத் தொடர தேவையான நிதியை பட்டிலியன  மாணவர்களுக்கான தேசியக் கல்வி உதவித்தொகை வழங்கியது.

இந்த உதவித்தொகை நிதிச்சுமையைக் குறைத்து அவருக்கு ஆராய்ச்சியில் கவனம் செலுத்த உதவியது. தொடர் நிதி  ஆதரவு, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் டாக்டர் சாஹா முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

தற்போது டாக்டர் அனிக் சாஹா மேற்கு வங்கத்தின் ஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் அசன்சோலில் உள்ள காஸி நஸ்ருல் பல்கலைக்கழகத்தில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி குழுமத் திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312985&reg=3&lang=1

***

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313137) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada