எஃகுத்துறை அமைச்சகம்
மத்திய கண்காணிப்பு ஆணையம் சார்பில் தென் மண்டல அளவில் பயிற்சிக் கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2026 1:02PM by PIB Chennai
மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்றும் தேசிய கனிமவள மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய பயிற்றுநர்களுக்கான பயிற்சித் திட்டம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய கண்காணிப்பு ஆணையம் மற்று தேசிய கனிமவள மேம்பாட்டு ஆணையத்தின் தென்மண்டல அலுவலகங்களை சேர்ந்த 75 கண்காணிப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் பிரவீன் குமார் சின்ஹா, காணாலி வாயிலாக கலந்து கொண்டு, மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் சுற்றறிக்கைகளின் முக்கியத்துவம், கண்காணிப்பு கையேட்டைத் திருத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில், அறிவுசார் திறன்களை பகிர்வது, திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது, கண்காணிப்பு நடைமுறைகளில் நிலைத்தன்மையை ஊக்குவிப்பது, நிறுவனத் திறனை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், பொதுத்துறை நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் திறமையான கண்காணிப்பு நிர்வாகம் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311896®=3&lang=1
***
TV/ AC /SM
(வெளியீட்டு அடையாள எண்: 2313050)
வருகையாளர் எண்ணிக்கை : 28