பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகையாளர் பாயல் மேத்தா மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 20 SEP 2026 12:09PM by PIB Chennai

பத்திரிகையாளர் பாயல் மேத்தா மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாயல் மேத்தா, கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்ட பத்திரிகையாளர் என்றும், அவர் கள நிலவரங்களை உன்னிப்பாக ஆய்வு செய்து, தேசியப் பிரச்சினைகள் குறித்த ஆழ்ந்த புரிதலைத் தனது செய்திகளில் வெளிப்படுத்தினார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அன்பான குணம், கருணை, தன்னைச் சுற்றியிருந்தவர்களுடன் அவர் பேணிய நல்ல நட்பு ஆகியவற்றுக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பாயல் மேத்தா, கள நிலவரங்களை உன்னிப்பாக ஆய்வு செய்து, தேசியப் பிரச்சினைகள் குறித்த ஆழ்ந்த புரிதலைத் தனது செய்திகளில் வெளிப்படுத்திய ஒரு சிறந்த பத்திரிகையாளர் ஆவார்.

அவரது பணிகளுக்கு அப்பாற்பட்டு, அவர் பலரின் வாழ்வில் செலுத்திய கருணைக்காகவும் அன்பிற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது திடீர், அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் மன வலிமையைப் பெறட்டும். ஓம் சாந்தி."

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2312665) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Malayalam