இடுகை இடப்பட்ட நாள்:
19 SEP 2026 4:57PM by PIB Chennai
மதுரை சர்வதேச விமான நிலையத்தில், 2026 செப்டம்பர் 17 முதல் 21 நாட்களுக்கு "பயணிகளுக்கான சேவை இயக்கம்" தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் முக்கியமாகப் பயணிகளுக்கான வசதிகள், சேவையின் தரம், தூய்மை, கண்ணியமான அணுகுமுறை, கனிவுடன் கூடிய சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், பல்வேறு விமான நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். நம்பகமான, திறன் வாய்ந்த, பயணிகள் நலன் சார்ந்த சேவைகளை வழங்குவதில் மதுரை சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
பயணிகளுக்கு இனிமையான, சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் விமான நிலையத்தின் தொடர் முயற்சிகளை இத்திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
சிறந்த சேவையை மையமாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினர், பணியாளர்கள், பயணிகளுடன் இணைந்து, மதுரை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் குத்துவிளக்கு ஏற்றி இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, முனையக் கட்டடத்தில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் நாளில் அனைத்து நிகழ்வுகளிலும் பயணிகளின் தீவிர பங்கேற்பு காணப்பட்டது. இது நிகழ்வுகளை உயிரோட்டமாகவும் ஈடுபாட்டுடனும் மாற்றியது.
இரண்டாம் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் தூய்மைப் பணிகளை மையமாகக் கொண்டிருந்தன. 'தூய்மையான, சிறந்த வெளிப்பகுதி' என்ற கருப்பொருளில் இந்நிகழ்வு தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, விமான நிலைய இயக்குநர், முனைய மேலாளர்கள், தூய்மைப் பராமரிப்புக் குழுவினர் ஆகியோர் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். முக்கிய பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்தும் சுத்தமாக இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். ஒரு சிறப்புப் பணியாக, மதுரை சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து குப்பைத் தொட்டிகளும் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டன.
***
SS/RJ