மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கத்தில் பங்கேற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 12:29PM by PIB Chennai

மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை, தூய்மைப் பணிகளுக்கான சிறப்பு இயக்கம் 6-ல் பங்கேற்பதற்காக ஆயத்தமாகி வருகிறது.  

பணியிடங்களில் தூய்மையைப் பராமரிப்பதற்கான  நடைமுறைகளை வலுப்படுத்துதல், நிலுவையில் உள்ள விவகாரங்களை உரிய நேரத்தில் தீர்வு காணுதல் ஆகிய நோக்கங்களுடன், 2025 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடத்தப்பட்ட, தூய்மைப் பணிகளுக்கான 'சிறப்பு இயக்கம் 5.0'-ல் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை முனைப்புடன் பங்கேற்றது.

அரசு அலுவலகங்களில் தூய்மையைப் ஒரு வழக்கமான நடைமுறையாக மேற்கொள்வதற்கும், நிலுவையில் உள்ள  விவகாரங்கலுக்குத் தீர்வு காணப்பட்டு அவற்றைக் குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ள  வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இந்த இயக்கதின் கீழ், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தற்போது தூய்மைப் பணிகளுக்கான 'சிறப்பு இயக்கம் 6'-ல் பங்கேற்பதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அளவிடக்கூடிய முடிவுகள், நீண்டகால தாக்கத்தை உறுதி செய்யும் வகையில், இந்த இயக்கத்தின் முக்கிய அளவுகோல்கள், இலக்குகளுக்கு ஏற்ப தனது செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310741&reg=3&lang=1  

-----

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312105) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी