நிதி அமைச்சகம்
பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சந்தை வாய்ப்புகளை மேம்படுத்த பயிலரங்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
16 SEP 2026 6:36PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை , ஸ்கோப் அமைப்புடன் இணைந்து, மகா ரத்னா மற்றும் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்காக தில்லியில் சிறப்பு பயிலரங்கம் நடத்தியது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பொதுத்துறை நிறுவனங்கள் துறை செயலாளர் கே. மோசஸ் பேசுகையில், சாலை, பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும், கடன் மதிப்பீட்டு நடைமுறைகள் வெளிப்படையாகவும், திறமையாகவும், இந்திய சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்றார்.
கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் நிதி வலிமை மற்றும் கடன் அபாயத்தை மதிப்பிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப் பயிலரங்கில் நிதியமைச்சகத்தின் 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311010®=3&lang=1
***
TV/VK/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311524)
வருகையாளர் எண்ணிக்கை : 9