சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினர் தேர்வு 2026
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2026 4:37PM by PIB Chennai
தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினர் தேர்வு 2026-க்கான அறிவிக்கையை 2026 செப்டம்பர் 10 அன்று மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணித் தேர்வுக்காக வெளிப்படையான முறையில் போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது. தேர்வுக்கு உரிய தகுதியுடையவர்கள் அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
பணி, வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம் ஆகியவை குறித்த விரிவான விவரங்களை ஆணையத்தின் இணையதளமான https://ssc.gov.in மூலம் அறிந்துகொள்ளலாம்.
தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை https://ssc.gov.in என்ற இணையதளம் அல்லது ஆண்ட்ராய்ட் போன்களில் mySSC செயலி மூலம் 2026 செப்டம்பர் 10 முதல் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் வழிக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 2026 அக்டோபர் 01 ஆகும்.
கணிணி அடிப்படையிலான தேர்வு தேதிக் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். இத்தேர்வு தென்மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 24 மையங்களில் நடைபெறும்.
***
TV/IR/GS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2311426)
வருகையாளர் எண்ணிக்கை : 41