சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆராய்ச்சி உதவித் தொகை மாணவர்கள் தடைகளை கடந்து சாதிக்க உதவுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 3:41PM by PIB Chennai

சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவியும், ஆதரவும் உயர்கல்வி மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி வாய்ப்புகளை சாத்தியமாக்குகின்றன. கல்விச் செலவுகளை எதிர்கொள்ளவும், ஆராய்ச்சியை தொடரவும், நீண்ட கால  தொழில்முறைச் சார்ந்த இலக்குகளை நோக்கி பணியாற்றவும், தேவையான ஸ்திரத் தன்மையை ஆராய்ச்சி உதவித் தொகை வழங்குகிறது.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 29 வயதான ஷிவானி குமாரி நிதி, சமூக, கல்விச்சார்ந்த தடைகளை எதிர்கொண்டு சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். விரிவுரையாளராக தற்போது பணியாற்றி வரும் அவர் உதவிப் பேராசிரியராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளார்.

பொருளாதார வசதி குறைந்துள்ள அவருக்கு ஜூனியர் ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதம் ரூ.31,000–மும், சீனியர் ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதம் ரூ.35,000-மும் கிடைத்தது.

இத்தொகை கல்வி, ஆராய்ச்சிக்கான செலவுகளை எதிர்கொள்ள உதவியதுடன் தனது பணியை தொடரவும் வழிவகுத்தது. இது அவருக்கு ஊக்கமளித்ததுடன் தனது கல்வி இலக்குகளைத் தொடர்வதற்கான தன்னம்பிக்கையையும் வலுப்படுத்தியது.

ஆராய்ச்சி உதவித் தொகையின் பங்களிப்பை ஷிவானியின் வெற்றி பிரதிபலிக்கிறது. அவரது சாதனை நிறுவன உதவி மற்றும் கல்வி வாய்ப்புகளால் வலுப்படுத்தப்பட்ட விடாமுயற்சிக்கு ஒரு உதாரணமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2310434&reg=3&lang=1

***

TV/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2310648) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी