இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 5:09PM by PIB Chennai
மத்திய விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் ரக்ஷா கட்சே, மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் ஆய்வு செய்தார். விளையாட்டு துறையில் வடகிழக்கு மாநிலங்களை சேந்த மாணவர்களுக்கான வாய்ப்புகள், விளையாட்டு மைதானங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, மிசோரம் மாநில விளையாட்டுதுறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்திய இளைஞர்கள் விளையாட்டில் சாதிப்பதற்கான சாத்தியகூறுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ரக்ஷா கட்சே கேட்டுக்கொண்டார். மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தேசிய, சர்வதேச அளவில் பங்கேற்கும் வகையில் விளையாட்டு துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310515®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310622)
வருகையாளர் எண்ணிக்கை : 8