பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமான, கடற்படை வீரர்களின் ஓய்வூதிய வழக்குகளுக்கு 100 சதவீதம் தீர்வுகண்ட பாதுகாப்பு கணக்கு துறை
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2026 5:59PM by PIB Chennai
பாதுகாப்பு கணக்கு துறை ஓய்வூதிய வழக்குகள் தொடர்பான புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஓய்வூதியம் தொடர்பாக, விமானப்படையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 638 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்திய கடற்படையில் 32 ஆயிரத்து 544 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 336 வழக்குகள் என 98.8 சதவீத வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.
சிறப்பு கள ஆய்வு, தீவிர கண்காணிப்பு, அதிகாரிகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு போன்ற காரணங்களால் இந்திய விமான, கடற்படை வீரர்களின் ஓய்வூதிய வழக்குகளுக்கு 100 சதவீதம் தீர்வு காணப்பட்டதாக பாதுகாப்பு கணக்கு துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு கணக்குகள் தலைமை கட்டுப்பாட்டாளர், பாதுகாப்பு கணக்குகள் முதன்மை கட்டுப்பாட்டாளர் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த சாதனை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு கணக்கு பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310567®=3&lang=1
***
TV/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2310619)
வருகையாளர் எண்ணிக்கை : 11