சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய அரசில் இளநிலைப் பொறியாளர் பணிக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 SEP 2026 6:50PM by PIB Chennai

ஜூனியர் பொறியாளர் தேர்வு 2026-க்கான அறிவிக்கையை மத்திய பணியாளர் தேர்வாணையம் 2026 செப்டம்பர் 2 அன்று, வெளியிட்டது. மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், அலுவலகங்களில் இளநிலைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த வெளிப்படையான போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது. நாட்டில் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பணி, வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, கட்டணம், தேர்வுத் திட்டம் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் பணியாளர் சேர்க்கை அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளது.

விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான https://ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்ட் போன்களில் mySSC செயலி மூலம் 2026 செப்டம்பர் 2 முதல் 22-ம் தேதி வரை சமர்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 2026 செப்டம்பர் 22 ஆகும். ஆன்லைன் வழிக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 2026  செப்டம்பர் 23 ஆகும்.

தேர்வு தேதிக் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். கணிணி அடிப்படையிலான இத்தேர்வு தென்மண்டலத்தில் தமிழ்நாடு,  ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும்.

***

TV/IR/PS/SH  


(வெளியீட்டு அடையாள எண்: 2310604) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English