நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மத்திய இணையமைச்சர் திருமதி நிம்புபென் ஜெயந்திபாய் பம்பானியா, வதோதராவில் இந்திய உணவுக் கழக கிடங்கைப் பார்வையிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 3:57PM by PIB Chennai
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திருமதி நிம்புபென் ஜெயந்திபாய் பம்பானியா, வதோதராவில் உள்ள காயவரோகனில் அமைந்துள்ள இந்திய உணவுக் கழகத்தின் (எஃப்சிஐ- FCI) சேமிப்புக் கிடங்கைப் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
காயவரோகனில் உள்ள எஃப்சிஐ-யின் நவீன சேமிப்பு, தானியங்கி தானியக் கையாளுதல் வசதிகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்தப் பயணத்தின் போது, சேமிப்புக் கிடங்கின் வசதிகள், செயல்பாடுகள், ஒட்டுமொத்த இயக்கம் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது. தானிய சேமிப்பு, கொள்முதல், கோதுமை ஏற்றிச் செல்லும் வேகன்களைக் கையாளுதல், தானியங்கி அமைப்புகள், ஆய்வக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். மேலும், ஆலையின் செயல்பாடு, உணவு தானியங்களைக் கையாளுதல், சேமிப்பதில் உள்ள பல்வேறு செயல்முறைகள் தொடர்பான விவரங்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, திருமதி நிம்புபென் பம்பானியாவும் அந்த வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் இயக்கத்தில் கலந்துகொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309734®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309833)
வருகையாளர் எண்ணிக்கை : 6