சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் இன்னல்களிலிருந்து மீண்ட ராகுல் லோவாங்கின் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2026 12:38PM by PIB Chennai
போதைப் பழக்கத்தில் இருந்து மீட்சியானது, தன்னம்பிக்கை, சுதந்திரம், மிகவும் நிலையான வாழ்க்கைக்கான பாதைகளைத் திறக்கும். சிகிச்சை, ஆலோசனை, மறுவாழ்வு ஆதரவு ஆகியவை தனிநபர்கள் போதைப்பொருள் சார்பிலிருந்து மீண்டு, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.
அருணாச்சலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் உள்ள பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 27 வயதான ராகுல் லோவாங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கோன்சாவின் சார்ஜுவில் உள்ள கேர் மீ ஹோம் வெல்ஃபேர் சொசைட்டியால் நடத்தப்படும் மாவட்ட போதை மீட்பு மையத்தில், போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் சிகிச்சை, மறுவாழ்வு ஆதரவைப் பெற்றார்.
இப்போது, ராகுல் சுயதொழில் செய்து, பொருளாதார ரீதியாக அதிக சுதந்திரம் அடைந்து, மேலும் நிலையான, பயனுள்ள வாழ்க்கையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
ராகுலின் குழந்தைப் பருவம் கடினமான குடும்பச் சூழ்நிலைகளால் நிறைந்திருந்தது. சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்ததால், அவருக்குப் போதுமான கவனிப்பு, வழிகாட்டுதல், மன ரீதியான ஆதரவு ஆகியவை கிடைக்கவில்லை. அவர் தனது 11 வயதில் போதைப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
2024 மே 9 அன்று, ராகுல் மறுவாழ்வு உதவி உள்ளிட்ட ஆதரவைப் பெற்றார்.
இந்தத் தலையீடு, ராகுல் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடவும், தனது தனிப்பட்ட திறன்களை வலுப்படுத்தவும், மேலும் நிலையான வாழ்க்கையை நோக்கி நகரவும் உதவியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309673®=48&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309766)
வருகையாளர் எண்ணிக்கை : 13