நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி நிறுவனங்களுக்கான முதலாவது துறைசார் சமூகப் பொறுப்புணர்வு கட்டமைப்பு: மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 7:48PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி மற்றும் இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே ஆகியோர் இந்திய நிலக்கரி நிறுவனங்களுக்கான முதலாவது துறைசார் சமூகப் பொறுப்புணர்வு கட்டமைப்பைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் 'தலசீமியா குழந்தை சேவைத் திட்டம்' மற்றும் 'சின்னஞ்சிறிய இதயம் ஆகிய முக்கிய நிறுவன சமூகப்பொறுப்புணர்வுத் திட்டங்களின் சாதனைகள் கொண்டாடப்பட்டன. தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 10 லட்சம் வரை உதவி வழங்கப்படுகிறது. இதுவரை 1,050-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், பிறவி இதயக் கோளாறு உள்ள குழந்தைகளுக்காகச் செயல்படுத்தப்படும் 'நன்ஹா சா தில்' திட்டம் மூலம் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, 1,500-க்கும் மேற்பட்ட இலவச அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய நிறுவன சமூக பொறுப்பு கட்டமைப்பு திட்டம், நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்தவும் பெரிதும் உதவும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307993®=3&lang=1
***
TV/VK/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308088)
வருகையாளர் எண்ணிக்கை : 6