சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கணக்குத் தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 8:49PM by PIB Chennai
இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் பின்வரும் தணிக்கை அறிக்கைகள் 2026 செப்டம்பர் 08 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டன.

- 31 மார்ச் 2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான ‘SC/ST/SCC மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்கள்’ மீதான செயலாக்கத் தணிக்கை குறித்த இந்திய தணிக்கைத் தலைவரின் தணிக்கை அறிக்கை - தமிழ்நாடு அரசு (2025 ஆம் ஆண்டின் அறிக்கை எண். 3)
- 31 மார்ச் 2023 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கை – தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் உற்பத்தி செயல்பாடுகள் குறித்த செயலாக்கத் தணிக்கை – தமிழ்நாடு அரசு – அறிக்கை எண். 4-2025
- 31 மார்ச் 2023 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான இந்திய தணிக்கைத் தலைவரின் அறிக்கை – மாநில பொதுத்துறை நிறுவனங்கள் – தமிழ்நாடு அரசு – (அறிக்கை எண். 5- 2025)
- ‘ஜல் ஜீவன் இயக்கம்’ மீதான செயலாக்கத் தணிக்கை குறித்த இந்திய தணிக்கைத் தலைவரின் தணிக்கை அறிக்கை - தமிழ்நாடு அரசு (2025 ஆம் ஆண்டின் அறிக்கை எண். 10),
- 31 மார்ச் 2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழ்நாட்டில் சீர்மிகு நகரத் திட்டத்தை செயல்படுத்துதல் மீதான செயலாக்கத் தணிக்கை குறித்த இந்திய தணிக்கைத் தலைவரின் தணிக்கை அறிக்கை
- தமிழ்நாடு அரசு (2025 ஆம் ஆண்டின் அறிக்கை எண். 11), மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலத்திற்கான இந்திய தணிக்கைத் தலைவரின் மாநில வருவாய் மீதான அறிக்கை (2026-ன் அறிக்கை எண் 1)
- தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை குறித்த இந்திய தணிக்கைத் தலைவரின் தணிக்கை அறிக்கை (2026-ன் அறிக்கை எண் 2)
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு முதன்மை கணக்காயர் (தணிக்கை-I) திரு. ஆர். திருப்பதி வேங்கடசாமி அவர்கள் கலந்துகொண்டு, சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் முக்கிய அம்சங்களை விளக்கினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு. ஜே. காமராஜ் அவர்களும் உடனிருந்தார்.

இந்த விரிவான தணிக்கை அறிக்கைகள் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
****
AD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2308076)
வருகையாளர் எண்ணிக்கை : 52